காந்திய மக்கள் இயக்கம் பேரில் பட்டா வாங்கித் தருவதாக பெண்களிடம் பண மோசடி
ராசிபுரத்தில் நியூ காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் காந்திசங்கர் என்பவர் இலவச பட்டா வாங்கித் தருவதாக பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக புகார்

பெண்களிடம் பட்டா வாங்கித் தருவதாக பண மோசடி : ராசிபுரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார்... நியூ காந்தி மக்கள் இயக்கம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பட்டா வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூல் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் பட்டா வாங்கித் தராமலும் பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக சங்கர் கண்ணன் (எ) காந்தி சங்கர் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்...