MP கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் திமுகவினர் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு | DMK NAMAKKAL
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் திரண்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனா்.

நாமக்கல்:துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு
சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக திண்டுக்கல் சென்று கொண்டிருந்த துணை முதல்வர் உதயநிதிக்கு தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் திமுகவினர் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளையும், சேலம் மாவட்டத்தின் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு நாமக்கல் வழியாக வருகை புரிந்த துணை முதல்வருக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சேலம் -கரூர் நெடுஞ்சாலை புதன்சந்தையில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் திரண்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனா்.