தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) ஆர்ப்பாட்டம்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும், உடனே நிறைவேற்ற வலியுறுத்தி பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) ஆர்ப்பாட்டம்
teachers protest

இராசிபுரம்:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும், உடனே நிறைவேற்ற வலியுறுத்தி பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பணிமூப்பு அரசாணை எண் : 243, நாள் : 21.12.2023 ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றியத்திற்க்குள் மட்டும் இடமாறுதல் மேற்கொள்ள திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடுக, பொதுமாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைத்திடுக, போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .