10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமா?

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க வளாகத்தில் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் உலக முட்டை தினம் பொது மக்களுக்கு 10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமா?
world egg day

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பொது மக்களுக்கு 10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டன.

தாய்ப்பாலுக்கு அடுத்து கோழி முட்டையில் தான் அதிக புரத சத்துக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

முட்டையை உட்கொள்வதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க வளாகத்தில் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டது.

பொது மக்களுக்கு 10 ஆயிரம் வேக வைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்புச் சக்தி, பார்வை திறன் மேம்படுத்தல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.