திமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறாத குடும்பம் இருக்கவே முடியாது
ராசிபுரம் அடுத்த வேப்பிலை குட்டை பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 250க்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சி.

3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மாவட்டம் முழுவதும் 14,500 இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அடுத்த வேப்பிலை குட்டை பகுதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 250க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் பெருமிதம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பிலை குட்டை பகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 250க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஆர் என்.இராஜேஷ்குமார் பேச்சு திமுக மற்றும் ஒன்றிய பிஜேபி அரசை காட்டமாக விமர்சித்தார் கொடைநாடு கொள்ளையும் கொலைகளையும் நாம் மறக்க முடியுமா தூத்துக்குடி துப்பாக்கி சூடு எடப்பாடி ஆட்சியில் சிகப்பு கறை கொடைநாடு கொள்ளையும் கொலைகளையும் நாம் மறக்க முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு எடப்பாடி ஆட்சியில் சிகப்பு கறை.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என காட்டம்... திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் இத்தனை திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்துள்ளோம் 10 ஆண்டுகளில் அதிமுக என்ன செய்தது என நீங்களே சொல்லுங்கள்… ஓடாத மின்விசிறி அரைக்காத மிக்ஸி ஆட்டாத கிரைண்டர் இதை கொடுத்தது தான் அவர்கள் சாதனை ...எல்லாம் பேரிச்சம் பழ கடைக்கு போய்விட்டது. ஆனால் கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலர் டிவி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள தரம் வித்தியாசம். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் கியா சிலிண்டர் விலையை உயர்த்தியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை இலவச பேருந்து முதியோர் உதவித்தொகை அது மட்டுமல்லாமல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் பொங்கல் பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்படும் மேலும் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 14,500 இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது எனவே மக்களுக்கான முதல்-அமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.என்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.