"இந்த குழாய் பார்த்தா தண்ணி வர மாதிரி தெரில.." வீடு வீடாகச் சென்று டார்ச் லைட் அடித்து ஆய்வு செய்த ஆட்சியர்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் தீவிரம்.

வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்த ஆட்சியர்.

தண்ணீர் தொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் கொசுப்புழுக்கள் உள்ளதாக டார்ஜ் அடித்து சோதனை.

நாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியில் டெங்கு ஒழிப்புப்பணிகள் குறித்துக் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு வீட்டிற்குள் நுழைந்த ஆட்சியர் உமா வீட்டிற்குள் இருந்த குளிர்சாதன பெட்டி, குடத்தில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீர், தொட்டியில் உள்ள தண்ணீரை டார்ஜ் லைட் அடித்து கொசுப்புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்தார் மேலும் வீட்டில் உள்ள நபர்களிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதாக என கேட்டறிந்தார்.

முன்னதாக அனைத்து பகுதியிலும் கொசு மருந்து மற்றும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.