அதிமுகவுடன் இணைந்து திமுக தோழமைக் கட்சிகள் அமைதி ஊர்வலத்தால் பரபரப்பு
பஸ் நிலையம் மாற்றப்பட்டால் , ராசிபுரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் , பொதுமக்கள் உட்பட வியாபாரிகள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும் நகர மக்கள் நன்மைக்காக அதிமுகவுடன் இணைந்து திமுகவின் தோழமைக் கட்சிகள் போராடுவதாக கூறி கோஷங்கள்
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மாற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
அதிமுகவுடன் இணைந்து திமுக தோழமைக் கட்சிகள் அமைதி ஊர்வலத்தால் பரபரப்பு .
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அதிமுக கட்சியுடன் இணைந்து திமுகவின் தோழமைக் கட்சிகள் நாளை நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு ராசிபுரத்தின் முக்கிய சாலைகளில் நடைபெற்ற அமைதி ஊர்வலம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றுவதாக ராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதிமுக உட்பட பல்வேறு கூட்டமைப்புகளும் தன்னார்வ அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராசிபுரம் நகர பேருந்து நிலையம் மீட்பு கூட்டமைப்பு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் புதிய பேருந்து நிலையம் மாற்றுவதை கண்டித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
இந்த கூட்டமைப்பில் அதிமுக உட்பட கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக , திராவிட விடுதலைக் கழகம் , மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகள், தேமுதிக போன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர் .
கூட்டமைப்பின் முதல் தீர்மானமாக நாளை ராசிபுரம் நகர் முழுவதும் முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது...
ஒவ்வொரு கிடைக்கும் துண்டறிக்கை வழங்கப்பட்ட நிலையில் , நாளை முழு கடை அடைப்பை ஆதரிக்க வலியுறுத்தி அதிமுகவின் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுகவின் தோழமைக் கட்சிகளான c ஐ டி யு,சி பி எம் ,மதிமுக , தி.க , இன்று புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய கடைவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர் .
அப்போது திராவிட விடுதலைக் கட்சியின் நகர செயலாளர் சேகுவாரா ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மாற்றப்பட்டால் , ராசிபுரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் , பொதுமக்கள் உட்பட வியாபாரிகள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும் , நகர மக்கள் நன்மைக்காக அதிமுகவுடன் இணைந்து திமுகவின் தோழமைக் கட்சிகள் போராடுவதாக கூறி கோஷங்கள் எழுப்பி சென்றார்.
#namakkal #rasipuram #admk #admknews #admkitwing #dmk #dmknews #dmkstalin #namakkaldmk #dmk4tn2024 #bjp #bjpnews #bjpindia #bjptamilnadu