கொல்லிமலை:பாரம்பரிய கலாச்சார விழா

கொல்லிமலை அ.இ.அ .திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 76- வது பிறந்த நாளை முன்னிட்டு கலாச்சார விழா

நாமக்கல்:கொல்லிமலை அ.இ.அ .திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 76- வது பிறந்த நாளை முன்னிட்டு கலாச்சார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரைப் பகுதியில் பாரம்பரிய கலாச்சார விழா நடைபெற்றது இதில் அதிமுக கொல்லிமலை வடக்குஒன்றிய செயலாளர் அய்யாசாமி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஹா S.தமிழ்மணி கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து முன்னாள் முதலமைச்சர்எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் அவர்களுக்கு கொல்லிமலை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யாசாமிமலைவாழை தார் கொடுத்து வரவேற்றார்.

மேலும் கொல்லிமலை கலாச்சார விழாவான சேர்வை ஆட்டம் ஆண்டிகுலத்தான் ஆட்டம் கும்மி ஆட்டம் குறவன் குறத்தி ஆட்டம் பல்வேறு வகையான நடன நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கலாச்சார நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட குழுவினர் கும்மியடி பெண்கள் மற்றும் மலைவாழ் மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ராஹா எஸ். தமிழ்மணி பரிசுகள் வழங்கி பாராட்டுகளும் தெரிவித்தார்..