ஶ்ரீமாசி பெரியண்ணசாமி | செங்குத்தான மலை உச்சியில் | தேரை தூக்கி வரும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய விழா

ஶ்ரீமாசி பெரியண்ணசாமி திருக்கோவில் மாசி மாத திருவிழா

நாமக்கல்:கொல்லிமலையில் செங்குத்தான மாசி குன்றின் மலை உச்சியில் நடந்த மாசி பெரியசாமி தேர் திருவிழா

3 கிலோமீட்டர் செங்குத்தான மலைப்பாதையில் மலைவாழ் மக்கள் சுமந்து செல்லும் தேர்த் திருவிழா...

சமமான பகுதியில் நடக்கும் தேர் திருவிழாவை பார்த்திருப்போம்.. ஆனால் செங்குத்தான மலை உச்சியில் மூன்று கிலோமீட்டர் தேரை தூக்கி வரும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய விழா என்பது குறிப்பிடதக்கது..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் மாசி பெரியசாமி கோயில்... மாசி குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பெரியண்ணசாமிக்கு தேர்த் திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்... மாசி பெரியண்ணசாமி தேர் திருவிழா என்பது கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக பாரம்பரியம்மிக்க திருவிழாவாக கருதப்படுகிறது.. இந்த திருவிழாவை ஒட்டி மாசி பெரியண்ணசாமி கோவிலுக்கு ஏராளமான மலைவாழ் மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் மூலவருடைய தேரை தூக்கி வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.... மேலும் மாசி பெரியசாமி கோயில் தேர் திருவிழாவில் சேலம், சென்னை, ஈரோடு ,கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்களும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு.... ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் கோயிலில் கூட்டம் களைக்கட்டுகிறது. பல நம்பிக்கைகள், வேண்டுதல்கள், நேர்த்திக்கடன்கள் எல்லாம் கோயிலைச்சுற்றி இடைவிடாது நடக்கிறது. குழந்தை வரம் கேட்டு தொட்டில் கட்டி வழிபடுவது இங்கு சிறப்பம்சமாகும். திருமணத்தடை நீங்கவும் மாசி பெரியண்ணன் சுவாமியை வழிபடுகின்றனர். வீடு கட்ட நினைப்பவர்கள் பலகைக்கற்களால் அடுக்கி கல்வீடு அமைப்பதும், நேர்த்திக்கடனாய் கிடாய் வெட்டுவதும் தொடர்கிறது. தீய சக்திகளின் பிடியில் இருந்து காக்க, கோழிகளை வேல்களில் குத்தி வைப்பதும் தொடர்கிறது. மொத்தத்தில் மாசி பெரியண்ணண் சுவாமி, கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, காலமெல்லாம் காத்து நிற்கும் ஒப்பற்ற காவல் தெய்வம் என்பது மலைவாழ் மக்களிடமும், பக்தர்களிடமும் தொடரும் நம்பிக்கை. @villigal #kollihills #tribal #chariotsofgod #festivel #namakkal